அரியக்குடி இராமானுஜ ஐயங்கார்

அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் (Ariyakudi Ramanuja Iyengar) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கருநாடக இசைக் கலைஞர் ஆவார்.

பிறப்பு: மே 19, 18901
இறப்பு: ஜனவரி 24, 19672

இளமைக் காலம் 

காரைக்குடி அருகிலுள்ள அரியக்குடி என்ற சிற்றூரில் பிறந்தார். தந்தையார் பெயர் திருவேங்கடத்தையங்கார்3 . புதுக்கோட்டை மலையப்பா ஐயர், நாமக்கல் நரசிம்ம ஐயங்கார், பூச்சி ஸ்ரீநிவாச ஐயங்கார் ஆகியோரிடம் இசை பயின்றார். 1918ஆம் ஆண்டு தியாகராஜ ஆராதனையில் தம் முதல் கச்சேரியை நிகழ்த்தினார். 4

இசைப்பணி

"அரியக்குடி பாணி" என ஒரு பாணியை வகுத்தார். இப்போதைய கருநாடக இசைக் கச்சேரிகளின் வடிவமைப்பை ஏற்படுத்தியவர் இவரே. இவரது இசைக்கச்சேரிகளுக்குப் பெரும்பாலும் பாலக்காடு மணி ஐயர் மிருதங்கம் வாசித்தார்.5 ஒரு புகழ்பெற்ற சங்கீத பரம்பரையை உருவாக்கிய பெருமை இவரை சேரும்.

மாணாக்கர்கள் 

கே. எஸ். நாராயணசுவாமி, பி. ராஜம் ஐயர், ஆலப்புழா வெங்கடேசன், மதுரை என். கிருஷ்ணன் ஆகியோர் இவரது மாணாக்கர்களில் பின்னாளில் புகழ் பெற்றவர்களாவர்.6

எழுத்தாளராக 

கல்கி இரா. கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனில் ஆசிரியராக இருந்தபோது பல புதிய எழுத்தாளர்களை ஊக்குவித்தார். 1938 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் தீபாவளி மலரில் அரியக்குடி இராமானுஜ ஐயங்கார் "ஸங்கீதத்தின் பெருமை" என்ற தலைபில் ஒரு கட்டுரை எழுதினார்.7

விருதுகள் 

  1. சங்கீத ரத்னாகர விருது, 1936 வேலூர் சங்கீத சபா8 
  2. சங்கீத கலாநிதி,1938 சென்னை மியூசிக் அகாதமி வழங்கியது.9 
  3. சங்கீத கலாசிகாமணி, 1938 & 1951, வழங்கியது: தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி (தலைமை டி. எல். வெங்கட்ராம ஐயர்)10 
  4. சங்கீத நாடக அகாதமி, 1952 11 
  5. பத்ம பூஷண், 1958 இந்திய அரசு வழங்கியது12 
  6. இசைப்பேரறிஞர், 1960 13 
இவற்றையும் பார்க்க:
A Musicians' Musician

மேற்கோள்கள்

1 Birth Chart
2 அரியக்குடி ஆல்பம்
3 A great violinist
4 Ariyakudi Ramanuja Iyengar Profile
5 Ariyakudi Ramanuja Iyengar Profile
6 Ariyakudi Ramanuja Iyengar Profile
7 சங்கீத சங்கதிகள் - 6
8 Ramabhadran Interview
9 Sangita Kalanidhi Recipients
10 Awardees of Sangeetha Kalasikhamani
11 SNA Awardees list (Carnatic Music - Vocal)
12 Ariyakudi Ramanuja Iyengar Profile
13 இசைப்பேரறிஞர் விருது பெற்றவர்கள்


No comments:

Post a Comment