டி. என். கிருஷ்ணன்

டி. என். கிருஷ்ணன் (T. N. Krishnan) தென்னிந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் ஆவார்.

பிறப்பு: அக்டோபர் 6, 1928

ஆரம்பகால வாழ்க்கை

பெற்றோர்: ஏ. நாராயண ஐயர், அம்மிணி அம்மாள். கேரள மாநிலம் திருப்புனித்துறையில் பிறந்த இவர், தனது தந்தையிடம் இசையைக் கற்கத் தொடங்கினார். பின்னர் ஆலப்புழா கே. பார்த்தசாரதியிடம் (அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் மாணவர்) கற்றார். தொடர்ந்து அரியக்குடி இராமானுஜ ஐயங்காரின் நேரடி மாணவராக இசை பயின்றார்.


இசைப் பணிகள்

எட்டாவது வயதில் தனது முதல் மேடைக் கச்சேரியை செய்தார். இளம் வயதிலேயே புகழ்வாய்ந்த பாடகர்களான அரியக்குடி இராமானுஜ ஐயங்கார், முசிரி சுப்பிரமணிய ஐயர், ஆலத்தூர் சகோதரர்கள், செம்பை வைத்தியநாத பாகவதர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோருக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்.
சென்னை இசைக் கல்லூரியில் இசைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் டெல்லி பல்கலைக்கழகத்தில் ‘இசை மற்றும் கலைகளுக்கான’ பள்ளியின் முதல்வராக பணியாற்றினார்.
2006ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமியின் உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.1
உலகின் பல நாடுகளுக்கும் இசைப் பயணம் செய்துள்ளார்.
இவரின் குறிப்பிடத்தக்க மாணவர்கள்:
  • விஜி கிருஷ்ணன் (மகள்)
  • ஸ்ரீராம் கிருஷ்ணன் (மகன்)
  • சாருமதி ரகுராமன்

விருதுகள்


  1. பத்மஸ்ரீ, 1973; வழங்கியது: இந்திய அரசாங்கம்
  2. சங்கீத நாடக அகாதமி விருது, 19742
  3. சங்கீத கலாநிதி விருது, 1980; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை3
  4. பத்ம பூஷன் விருது, 1992; வழங்கியது: இந்திய அரசாங்கம்
  5. சங்கீத கலாசிகாமணி விருது; 1999; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி4

மேலும் பார்க்க



மேற்கோள்கள்

No comments:

Post a Comment