சகாராம ராவ்

சகாராம ராவ் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு சித்ர வீணை (கோட்டு வாத்தியம்) வாத்தியக் கலைஞர் ஆவார்.

பிறப்பு:
இறப்பு: 1930

திருவிடைமருதூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் மிகப் பிரபலமான கருநாடக இசை வித்துவானாக விளங்கினார். இவரது தந்தை பெயர் ஹரி ராவ். மகன் பெயர் சீனிவாச ராவ்.

தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது பல மராட்டியர்கள் தஞ்சைப் பகுதிகளில் குடியேறினார்கள். அப்படிக் குடியேறியவர்களில் சகாராம ராவின் குடும்பமும் ஒன்று. சித்ரவீணை என்ற வாத்தியத்திற்கு கோட்டு வாத்தியம் என சகாராம ராவ் தான் பெயர் சூட்டினார். (இன்னொரு பிரபல கோட்டு வாத்திய வித்துவான் பூதலூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்) தற்போது சித்ரவீணை என்றே அந்த வாத்தியம் அழைக்கப்படுகிறது. தந்திகளை ஒரு கையால் கட்டையைக் கொண்டு அழுத்தி மறுகையால் மீட்டி வாசிப்பது சித்ரவீணை எனப்படுகிறது. இக்காலத்தில் ரவிகிரண் சித்ரவீணைக் கலைஞராக பிரபலமடைந்துள்ளார்.

செம்மங்குடி சீனிவாச ஐயர் இவரின் மாணவர்.

மேற்கோள்
கால வெள்ளத்தில் கரைந்து போன கலைஞர்கள்

No comments:

Post a Comment